சென்னை எழும்பூரில் உள்ள விடுதி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் தெரிவித்ததாவது:
எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைய வாய்ப்பே இல்லை. ஒருமுறை இணைந்தற்காக நமக்குக் நல்ல பாடம் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும்” என்று ஓபஎஸ் தெரிவித்தார்.








