ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

புதுடெல்லி
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது…
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீக்க தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த மார்ச் 28ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார்…
அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமமு சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிட்டனர்…
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் கவுதம் சிவசங்கர் கடந்த 5ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட