கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திய: பியூஷ் கோயல் தகவல் !

கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி விட்டது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா கனடாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையை கடந்த செப்டம்பர் மாதம் கனடா இடை நிறுத்தியது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தியா-கனடா பேச்சுவார்த்தைகளில் ஆரம்பகட்ட முன்னேற்றத்திலேயே அதனை இடைநிறுத்தம் செய்வதாக கனடா தரப்பு தெரிவித்தது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை சுமார் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. சரக்குகள், சேவைகள், பிறப்பிட விதிகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் கனடா அதிகாரிகள் கடந்த மே மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஒப்பந்தத்தை நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்தியா-கனடா இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை கனடா இடைநிறுத்தியது.

இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனவும், இந்த இடைநிறுத்த காலம் என்பது இரு நாடுகளும் முன்னேற்றத்தைக் கணக்கிட உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது கனடா என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கனேடிய அரசியல்வாதிகளிடையே சில தவறான கருத்துகள் உள்ளன. அவை ஆதாரமற்றவை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சந்தை பெரியது எனவும், அதிக வாய்ப்புகளை வழங்குவதால் இந்த நடவடிக்கை கனடாவை மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

2022-23ல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 8.16 பில்லியன் டாலராக இருந்தது. இது அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகமான 128.7 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் குறைவானது. என்றாலும், இந்தியா தனது பொட்டாஷ் தேவைகளுக்காக கிட்டத்தட்ட முழுவதுமாக இறக்குமதியைச் சார்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான கனடாவிலிருந்து அதிக அளவிலான பொட்டாஷை இந்தியா வாங்குகிறது. கலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.