கரூர் மாவட்டத்தில்£ 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும்விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி,செயல் இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பா.பிரியங்காபங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் கிராமத்தில் அனாதீனம் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகளும், பண்ணப்பட்டி கிராமத்தில் கல்லாங்குத்து நிலத்தில் 9.11 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகளும், இனுங்கூர் கிராமத்தில் வேளாண்மை துறை பாதுகாப்பில் உள்ள நிலத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சம் மரக்கன்றுகளும், கன்னிமவளத்துறை சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளும், கரூர் மாநகராட்சி உட்பட்ட பல பகுதிகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1300 மரக்கன்றுகளும், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1800 மரக்கன்றுகளும், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1300 மரக்கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் 50,650 மரக்கன்றுகளும், பேரூராட்சிகள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 6700 மரக்கன்றுகளும், சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 500 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 157 பஞ்சாயத்துகளில் 4 லட்சம் மரக்கன்றுகளும் ஆக மொத்தம் கரூர் மாவட்டம் முழுவதும் வனப் பகுதியினை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து காணொளி வாயிலாக பிற இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் பா. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு) திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி (ஊரக வளர்ச்சி), சீனிவாசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்