கர்நாடகாவில் பா.ஜ.க பின்னவின் காரணம் என்ன? : பிரதமரிடம் அகட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எதிர்பார்க்காத அளவுக்கு பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. வெறும் 86 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அக்கட்சியின் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தோல்வி பா.ஜ.க தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகும். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 40 சதவீத கமிஷன் விவகாரம், எம்.எல்.ஏ.க்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது.

மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற வைத்தது உள்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி கர்நாடக பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளதாக தகவல். அப்போது அந்த மூத்த நிர்வாகி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கான காரணம் பற்றி பிரதமரிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். அதாவது, தேர்தலில் டிக்கெட் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. மாநிலத்தில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை முறையாக வழிநடத்தவில்லை. அவர்களை புறக்கணித்துள்ளனர்.

ஆதலால் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் உற்சாகமாக ஈடுபடவில்லை. ஆக இதுவும் தோல்விக்கு ஒரு காரணம் ஆகும். மேலும் கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டியதன் பெயரால் தோல்வி அடைந்தனர்.

40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, பா.ஜனதா தலைவர்கள் சரியான பதிலடி கொடுக்காததும் தோல்விக்கு மற்றொரு காரணம். மேலும் நீங்கள் மட்டும் பிரசாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் பா.ஜனதா 35 இடங்களை கூட பெற்றிருக்காது என்றும் அந்த மூத்த நிர்வாகி, பிரதமர் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்