அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

கலைஞர் பிறந்தநாளில் 1 கோடி வாக்காளர் தி.மு.க. வில் சேர்க்கும் பணி : தமிழக முதல்வர் துவக்கம்

தி.மு.க.வில் ஏறத்தாழ ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவரும் தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டதின் பேரி கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர். துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.

புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர். கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

கலைஞர் பிறந்தநாளில் 1 கோடி வாக்காளர் தி.மு.க. வில் சேர்க்கும் பணி : தமிழக முதல்வர் துவக்கம்

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்