காங். தலைவர் கார்கேவுடன் ‘இந்தியா கூட்டணி’ தலைவர்கள் நாளை மறுநாள் ஆலோசனை

புதுடெல்லி:
இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்கள், மல்லிகார்ஜூன கார்கேவுடன் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தன.
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்றது.
அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களைவை தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி விரைவில் முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத்தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டம் கூட உள்ளது. செப்டம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத