அண்மை செய்தி

காவிரி விவகாரம்: ஆளும், எதிர்க்கட்சிகள் கூட கூட்டாத அனைத்துக்கட்சி கூட்டத்தை நாங்கள் கூட்டியுள்ளோம்: முன்னாள் எம்எல்ஏ தனியரசு

சென்னை:
காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான நதிநீர் பங்கீட்டை வழங்க வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அனைத்து கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி முன்னெடுப்பில் நடைபெற்றது. இதில் பா.ம.க. சார்பில் ஜெயராமன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி சண்முகம், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபால், பாபுஜி சுவாமிகள், தடா ரகீம்,கிறிஸ்தவ இயக்கத்தின் ஏசுதாஸ், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன், நாடார் கட்சி பறையர் பேரவை நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் அம்பேத்கர் தாசன், இந்திய குடியரசுக்கட்சி ராம்தாஸ் அத்லே, அற்புதம் அம்மாள், புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் சியாம், உள்பட பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனியரசு பேசுகையில், உலகம் முழுவதும் பரவி வாழும் 10 கோடி தமிழ் மக்களை நம்பிக்கையை பெற்றிருக்கிற, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது சிறை என்றாலும் மயில் வாகன சுகபோக இடமாக இருந்தாலும் தாய் தமிழுக்காக உழைக்கின்ற தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கள் இணைந்து கூட்டமைப்பாக நடத்துகின்ற காவிரி உரிமையை மீட்டிட மேகதாது அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தும் வகையில் அனைவராலும் திரும்பிப்பார்க்கின்ற ஆர்ப்பாட்டம் தலைம ஏற்றிருக்கின்ற தாய் தமிழ் அரசியல் கட்சிகள்தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நடிகர் என்றால் ஒரு அங்கீகாரம் இருக்கும். தமிழ் வாழ்க, மண் வாழ்க என்றால் ஆதரவு இருக்காது என்று நமது தலைவர்கள் இங்கே பட்டியலிட்டார்கள்.
தமிழ்நாடு ஒரு புதிய அரசியலை புதிய பாதையை கட்டமைக்கிறது. அதற்கான முதல் மேடை இந்த மேடை. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அறவழியில் விடுக்கும் கோரிக்கை. தமிழகத்தில் ஜோசப் விஜய் முதல்வராக இருக்கிறார். பிரதான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் என அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்னெடுத்தும் அவர் முயற்சி செய்யவில்லை. 10 கோடி மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு கர்நாடகாவிற்கே பாஜக அரசுக்கு துணை போவார் எனில் தமிழர்கள் இனமாய், மொழியாய் திரள்வோம் என எச்சரிக்கும் ஆர்ப்பாட்டம் தான் இது.
இதுபோன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதான ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, எடப்பாடி பழனிசாயோ முன்னெடுக்கவில்லை. தமிழக மக்களுக்காகவே பிறந்து வளர்ந்து, சிறையில் கிடந்து, மடிந்து வாழ்ந்து வரும் இயக்கத்தின் தலைவர்கள் உள்ளனர். இந்த மண்ணை மீட்கை வந்த பச்சைத்தமிழ்த்தாய் பிள்ளைகள். தமிழ் சமூகம் எதிற்கும் வலையாது. மேடையில் யாரும் கவுரவம் பார்க்கவில்லை. ஒற்றுமையாக இருக்கிறோம். இங்கே அனைத்து மதத்தினரும். சாதியினரும் உள்ளனர்.
பனையூரில் இருந்து கோட்டைக்கு வர முடிகிறது. நாங்கள் பல்வேறு அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளோம். தாய் தமிழ் 10 கோடி உறவுகளே சாதி, மதம் பார்க்காமல் காவிரி விவகாரம், மாஞ்சோலை விவகாரத்தில் தமிழர் உரிமையை மீட்டெடுப்போம். நாங்கள் யாரும் கௌரவம் பார்க்கவில்லை. ஜோசப் விஜய் ஏன் அனைத்து கட்சியை கூட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை. 234 சட்டமன்ற உறுப்பினர்களிலேயே உயரமாக உள்ளவர் கிருஷ்ணசாமி. சட்டமன்றத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்கின்ற நான், வேல்முருகன், கிருஷ்ணசாமி வெளியே இருக்கிறோம். வேறு யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தனது தொகுதி எம்எல்ஏ யார் என்று மக்களுக்கு தெரியாது. அமைச்சர்கள் யார் என்று தெரியாது. ஏன் முதல்வர் விஜய்க்கே தெரியாது. காவிரி உரிமையை மீட்டெடுக்க அனைவரும் அணி சேர்வோம். சீமானை நான் வேலூர் சிறையில் தான் பார்த்தேன். புதிய தமிழகம் கட்சி எத்தனை வழக்குகளை சந்தித்திருப்போம். நாடார் சமூகத்தில் பக்குவமான என்.ஆர்.தனபால் எத்தனை பிரச்சனைகளை சந்தித்திருப்பார். இந்த மக்கள் மன்றம்தான்ன தமிழ்நாட்டை வழிநடத்தப்போகிறது. தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க, ஈழத்தை பொதுவாக்கெடுப்பின் மூலம் மீட்டெடுக்க அணி சேர்வோம். காவிரி உரிமையை மீட்போம், மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்போம். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை மீட்போம். தமிழன் இனி உலகின் எந்த சிறையிலும் அடைபடக்கூடாது. தமிழர் அடிமை விலங்கை தகர்த்தெறிவோம் என்றார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை,தமிழ்நாடு முதல்-வர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அ.தி.மு.க.

மேகதாது அணை கட்டினால் 1 லட்சம் பேருடன் எங்கள் படை அங்கு இருக்கும்: டாக்டர். கி.கிருஷ்ணசாமி

சென்னை:காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான

காவிரி விவகாரம்: ஆளும், எதிர்க்கட்சிகள் கூட கூட்டாத அனைத்துக்கட்சி கூட்டத்தை நாங்கள் கூட்டியுள்ளோம்: முன்னாள் எம்எல்ஏ தனியரசு

சென்னை:காவிரியின் குறுக்கே தேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக