சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம்: திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு…

திருப்பதி: சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்றிரவு திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ஜெகன் ஆட்சியில் திருப்பதிநெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்கு 11 நாள் பிராயச்சித்த விரதத்தை நிறைவு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் நேற்று இரவு திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

திருப்பதி பிரசாதத்தில் கலப்படம் நடந்துக்கொண்டிருக்கிறது என நான் தேர்தல் பிரச்சாரத்திலேயே கூறினேன். அதை அவர்கள் கண்டுக்கொள்ள வில்லை. ஏழுமலையானுக்கு ஒரு தீங்கு நடந்தால் பார்த்து கொண்டு சும்மாஇருக்க வேண்டுமா ? திருமலை ஏழுமலையான் கோயில் பிரசாதம் தயாரிப்பதில் தவறு நடந்தது. நான்விரதம் இருந்தேன். ஆனால்இதனை கூட அசிங்கமாக சித்தரிக்கின்றனர். நான் ஒரு சனாதன இந்துஎன கூறிக்கொள்வதை பெருமையாக கொள்கிறேன். எனது மகள்கிறிஸ்துவத்தை தழுவி உள்ளதால், நான் திருமலைக்கு வந்த போது, அவளையும் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வைத்தேன். அதன் பிறகே அவளை தரிசனத்திற்கு அழைத்து சென்றேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதீத விசுவாசம்.

மிழில் பேசுகிறேன்: தமிழர்கள் இங்கு இருப்பதால் தமிழிலேயே பேசுகிறேன். தமிழகத்தில் உள்ள ஒரு இளம் அரசியல்வாதி என்ன கூறினார் தெரியுமா?சனாதன தர்மம் ஒரு வைரஸ் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என பேசினார். (தமிழகதுணை முதல்வர் உதயநிதியைமறைமுகமாக குறிப்பிட்டார்.) இதை போல் ஒரு கிறிஸ்தவத்தையோ, இஸ்லாத்தையோநீ பேச முடியுமா? நாங்கள் எனஇளிச்சவாயர்களா?

நாம் ஒற்றுமையாக இல்லாததே இதற்கு அடிப்படை காரணம். நல்லவர்களை கையாலாகாதவர்கள் என இவர்கள் நினைத்து விட்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்துக்களுக்கு ஒற்றுமை கிடையாது. அதனால்தான் பலர் நம் மீது ஏறி சவாரி செய்கிறார்கள்.

வேற்று மதத்தை தவறாக பேசினால் பலர் வரிந்து கட்டி கொண்டு வருகிறார்கள். சினிமா துறை, அரசியல் துறையை சேர்ந்த பலர் இதில் உள்ளனர். ஆனால், இந்து மதத்தை யாராவது தவறாக பேசினால் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். இது ஏன் ? இயேசு மற்றும் அல்லா குறித்து தவறாக பேசினால் நாட்டை தீ வைத்து கொளுத்துகிறீர்களே. நாங்கள் ஏன் ராமரையோ, கிருஷ்ணரையோ, ஏழுமலையானையோ தவறாக பேசினால் கொந்தளிக்க கூடாது ?

சட்டம் தேவை: காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வாராஹி இந்து நம்பிக்கை பதிவேடு உள்ளது. சனாதன தர்மத்திற்காக நாம் அனைவரும் ஜாதி, கட்சி பாகுபாடின்றி ஒருகுடையின் கீழ் வர வேண்டும். இதற்காகத்தான் இந்த வாராஹி பதிவேட்டினை அறிமுகப்படுத்துகிறேன். அதில் உள்ள நிபந்தனைகள் வருமாறு: எந்த மதத்திற்கோ, தர்மத்திற்கோ தீமை நடந்தால் நாம் எதிர்க்க வேண்டும்.

நாடு முழுவதும் சனாதன தர்மத்தை காக்க ஒரு சட்டம் தேவை, இதனை அமல்படுத்த சனாதன தர்ம பரிரக்‌ஷன வாரியம் அமைக்க வேண்டும். தூய்மையான கோயில் பிரசாதங்கள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட வேண்டும். கோயில்கள், சுவாமியை தரிசிக்கும் மையங்களாக இல்லாமல் கல்வி, இந்து கலாச்சாரம், சுற்றுலா மையங்களாக இருத்தல் அவசியம்.

நம்பிக்கை விவகாரம்: திருப்பதி பிரசாதம் கலப்பட விவகாரம் சின்ன விஷயம் அல்ல. இது பிரசாதம் குறித்த பிரச்சனை அல்ல. பல கோடி மக்களின் நம்பிக்கைக்குரிய விவகாரம். நெய் விஷயத்தில் தவறு நடந்தது என கூறினால், எங்களை திட்டுகின்றனர். தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி எங்கே போனார் ? எங்கே மறைந்து கொண்டிருக்கிறார் ?

நம் சனாதன தர்மத்தை நாம்காப்பாற்றி கொள்வோம். நம்சனாதனத்தை இழிவு படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ உயிரை கொடுத்தாவது நம் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம். இவ்வாறு பவன் கல்யாண்கூறினார். இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65