சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இதனால் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சபாநாயகரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.
ஆனால், தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தி உள்ளது.

கனிமொழி எம்பி கூறுவது என்ன?

இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “ காங்கிரஸிடம் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம்; இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம்” எனக் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.