சாலையில் தகராறில் லாரியில் இழுத்து செல்லப்பட்டவர் பலி – டிரைவர் கைது

மும்பை, சாலையில் நடந்த தகராறில் லாரியில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தொடர்புடைய டிரைவர் கைதானார். மும்பை புறநகர் கோரேகாவ் பகுதியில் உள்ள எஸ்.வி. சாலை வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன் நரேந்திர பவார் என்பவர் தனது நண்பருடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று அவர்களை மோதுவது போல வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர பவார் அந்த லாரியின் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து நரேந்திர பவார் தனது கையில் இருந்த செல்போனை எடுத்து அங்கு நடப்பதை வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினார். ஆனால் லாரி டிரைவர் அவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிவிட்டு லாரியில் ஏறி செல்ல முயன்றார். ஆனால் நரேந்திர பவார் அந்த லாரியின் கதவை திறக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது லாரி டிரைவர் வண்டியை வேகமாக ஓட்ட தொடங்கினார். இதில் நரேந்திர பவார் லாரியின் கதவை பிடித்தப்படி தொங்கியவாறு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நரேந்திர பவாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நரேந்திர பவார் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்