சியோமி நிறுவனம் தனது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. சியோமியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் சியோமி 13 அல்ட்ரா சர்வதேச வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜூன் 8-ம் தேதி சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலை வாங்குவோருக்கு மூன்று மாதங்கள் யூடியூப் பிரீமியம் சந்தா, 6 மாதங்களுக்கு 100 ஜிபி கூகுள் ஒன் சந்தா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சியோமி 13 அல்ட்ரா மாடல் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்டில் கிடைக்கும் என்றும் ஐரோப்பிய சந்தையில், இதன் விலை 1299 யூரோக்கள் அல்லது 1499 யூரோக்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






