ரூ.225 கோடி மோசடி வழக்கு: சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை:
வங்கியில் ரூ.225 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் பிரபல ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் (oceanic edible international) பழம், காய்கறி மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வரும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் சொந்தமாக பண்ணை வைத்து பழம், காய்கறிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தொழில் விரிவாக்கத்திற்காக எஸ்பிஐ, ஐடிபிஐ, ஐஓபி, ஐசிஐசிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கியில் இருந்து 225 கோடி ரூபாய் கடனாக பெற்றது.
ஏற்கெனவே இந்நிறுவனம் 2019ம் ஆண்டு இதேபோல் வங்கியில் ரூ.104 கோடி கடன் பெற்று அந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்நிறுவனம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக ஐஒபி வங்கி சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் சிஐபி அதிகாரிகள் oceanic நிறுவனத்தின் இயக்குநர்களான ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி, டாமினிக்சாவியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம் வங்கியில் கடன் வாங்கிய பணத்தை மத்திய அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து, வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சூளைமேட்டில் உள்ள தலைமை அலுவலம், மேற்கு தாம்பரம் திருவள்ளூர் தெருவில் உள்ள சரவணன் வீடு மற்றும் தி.நகர், பெருங்குடி, கோடம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை, உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்த தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்