சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது

சென்னை:
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு மற்றும் நல்லமுத்து நகர் தெரு பகுதியில் பழமை வாய்ந்த 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.
தற்போது கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியானது பாரிமுனையில் மிகவும் குறுகலான, நெருக்கடியான பகுதியாகும். வியாபாரிகள் அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக உள்ளது. தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்று தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பேரிடர் மீட்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்