சென்னை மாநகராட்சியில் கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்

சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம். மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம். இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது. இந்த பிரச்சினைகளை தடுக்க கோடை வெயில் மற்றும் பருவமழை காலத்தில் இந்த வசதி பயனுள்ளதாக அமையும். கடந்த சில மாதங்களாக இந்த முறை சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது. அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.