- அமெரிக்காவில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளரை தமிழ்நாடு ஆன்டி-டெரரிசம் ஸ்குவாட் ATS போலீசார் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
யார் அவர்?
- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
என்ன வழக்கு?
- 2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு.
இலக்குகள்:
- விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்.
- இந்த மிரட்டல்களால் விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு சோதனை நடந்தது. ஆனால் எல்லாமே போலி என்று பின்னர் தெரியவந்தது.
எப்படி மாட்டினார்?
- தனது அடையாளத்தை மறைக்க VPN, Dark Web போன்றவற்றை பயன்படுத்தினார். ஆனால் ஒரு மிரட்டல் மெயிலுக்கு தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சலில் இருந்து பதில் அனுப்பினார். அதன் மூலம் சைபர் கிரைம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.
- கிட்டத்தட்ட 6 மாதமாக அவரை கண்காணித்து, விமான நிலையங்களில் Look Out Circular வெளியிட்டு கைது செய்தனர்.
தற்போதைய நிலை:
- இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ATS மட்டும் 33 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தனியாக செய்தாரா இல்லை வேறு யாராவது உதவினார்களா என ATS விசாரணை நடத்தி வருகிறது.







