சைதையில் புயல் பாதிப்பு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்

சென்னை:
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்தனர்… புயல் பாதிப்பு நீங்கி இயல்புநிலை திரும்பி வரும் நிலையில் மக்கள் உடல் நலம் கருதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்… சுமார் 12000 பேர் பயனடைந்ததாக புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் ஏராளமானோர் பங்கேற்று பலனடைந்தனர்… இதில் பங்கேற்றவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தளபதி விஜய் அறிவுறுத்தலின்பேரில் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான புஸ்ஸி என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் விஜய் மக்கள் இயக்க சைதை பகுதி தலைவர் இ.ஜெ.ஜெ.ராம், செயலாளர் சைதை ஆ.சதிஷ், பொருளாளர் சைதை ஆர்.யுவராஜ், அமைப்பாளர் சைதை பி.தினேஷ், துணைச் செயலாளர் யாக்கோப் ஆகியோர் ஏற்பாட்டின்படி நடைபெற்றது. இதில் மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.