சைதையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைமேடை அகற்றப்படுமா?

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முதல் பஜார் சாலை வரை சாலையோர கடைகள் புதிது புதிதாக முளைத்தன. நடைபாதை கடைகள் அதிகரித்தன. வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. பற்றாக்குறைக்கு இருசக்கர வாகனங்கள் வேறு சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் கூட ஆக்கிரமப்புகளை தாண்டி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இதனால் இங்கு உள்ள அரசு பொது மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது இப்படி இருக்க ஏராளமான புகார்கள் அரசுக்கு சென்று கொண்டிருந்தன. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முதல் பஜார் சாலை வரை ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட மறுநாளே மீண்டும் நடைபாதை கடையினர் முளைக்கத் தொடங்கின. சாலையோரம் இருசக்கர வாகனங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் (09.08.2026) இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் ரெக்கவர் வாகனம் மூலமாக அவற்றை காவல்நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர்.

தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு கடைகள் முளைக்க வாய்ப்பு இருக்கிறது. காவல் துறையினர், மாநகராட்சியினர் கையூட்டு பெற்றுக் கொண்டு இதனை கண்டும் காணாமலும் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு மீண்டும் முளைக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை பஜார் சாலையில் உள்ள சுரங்கப்பாதைக்கு மேற்பரப்பில் நடைமேடை ஒன்று உள்ளது. இதன் இரண்டு பகுதிகளிலும் இருசக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல வசதி கிடையாது. நடைமேடை படிக்கட்டுகள் இதற்கு தடையாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நடைமேடையின் இருபகுதிகளிலும் நடைபாதை கடைகள் ஏராளமாக முளைத்துள்ளன. தற்போது இந்த ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் இவை மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது.
இந்த வழியாகத்தான் விநாயகர்பேட்டை, அப்துல் ரகாக் தெரு, அண்ணாநகர், சலவையர் காலனி, திடீர் நகர், மேக்ஸ் லேண்டு, கலைஞர் கருணாநிதி தெரு, கோதாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நடைமேடை உள்ள சாலை வழியாக இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்பதால் ஆட்டோவில் செல்வோர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேர விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.
இந்த அவல நிலையை போக்க பஜார் சாலை சுரங்கப்பாதைக்கு மேல் உள்ள நடைமேடையை அகற்றிவிட்டு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிவரும் இந்த நேரத்தில் இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.