ஜப்பானில் வடகொரியா ஏவுகணை சோதனை? மக்கள் உடனே வெளியேற உத்தரவு

டோக்கியோ:
ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள் என கூறியது. பொதுமக்கள் கட்டிடத்திற்கு அடியிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ சென்று மறைவாக பதுங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியது.
இதுபற்றி ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தகவலை சேகரிக்க மற்றும் ஆய்வு செய்ய முடிந்த வரையிலான முயற்சியில் ஈடுபட அர்ப்பணிப்புடன் செயல்படவும். பொதுமக்களுக்கு விரைவான, போதிய தகவலை வழங்கவும்.
விமானம், கப்பல் மற்றும் பிற பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். வருங்காலத்தில் நிகழ கூடிய அனைத்து விசயங்களுக்கும் தயாராவது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளது.
எனினும், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யசுகாஜூ ஹமடாவும் அந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பில் விழவில்லை என தெரிவித்து உள்ளார். தி கார்டியன் வெளியிட்ட செய்தியில், ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்க கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் தெளிவுப்படுத்தி உள்ளனர் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு