அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை:
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா

மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான உடனேயே எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதினார். நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்படாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. நெற்களத்தில் நிலக்கரியா என டெல்டா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

அதிமுக

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.

காங்கிரஸ்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசினார். டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காதது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டார்.

பாமக

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த பாமக வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். திட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு நன்றி. தஞ்சை தரணி என்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த வி.சி.க. வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது வி.சி.க. உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசினார். விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முதலமைச்சர் வலுவான கடிதத்தை ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு:

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினர். தமிழ்நாடு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாக ஜவாஹிருல்லா கூறினார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கும் என தெரிந்தும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு தமிழ்நாடு விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று வேல்முருகன் சாடினார்.

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மாற்றக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு பா.ஜ.க. கடிதம் எழுதியுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை