தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு- பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : மா.சுப்பிரமணியன்

சென்னை:
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமீப காலமாக இந்தியா முழுவதும் எச்3என்.2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் முதல்வர் உத்தரவின் படி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 800 இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன.
காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பெரிய அளவில் பதற்றம் அடைய தேவை இல்லை. காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், தொண்டை வலி போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையின் தாக்கம் கூடிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தினசரி 20 முதல் 25 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் அணிந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம்“ என குறிப்பிட்டார்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்