தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மார்ச் 10 ஆம் தேதி காய்ச்சல் முகாம்: அமைச்சர்மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை:
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு முழுவதும் வருகிற மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் 200 இடங்களில் நடைபெறும் காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சல் இதுவாகும். இதன் அறிகுறிகள் உடல் வலி ,தொண்டை வலி ,இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் தேவையான மருந்து மாத்திரைகள் இடம் பெறும். பொதுவாக மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற அம்சங்களினால் நமக்கு ஏற்படும் கிருமி தொற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் .
எனவே வருகிற மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் காய்ச்சல் முகாமில் தங்களை பரிசோதித்துக் கொண்டு தேவை இருப்பின் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்