செங்கல்பட்டு மாவட்டம் : பல்லாவரம் வட்டம் குரோம்பேட்டை ராதா நகர் 26 வார்டில் தாம்பரம் மாநகராட்சி சார்பாக உலக வங்கி மூலம் அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை 2023 மே 31-ல் ஆய்வு செய்ய உலக வங்கியின் பிரதிநிதிகளான திருமதி மன்ஷாசென் திரு கமல்தான் ஆகியோர் வந்திருந்தனர்.



இவர்களோடு தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செயற்பொறியாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ன் குழு தலைவர் திரு ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் புசிராபானு அவ்வார்டின் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்







