கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
குறள் விளக்கம்: தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கே அல்லாமல் மற்றவர்க்கு மனக் கவலையை நீக்குதல் இயவாது
திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் ஏசாயா 40:25 என்னை
யாருக்கு ஒப்பிடுவீர்கள் எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்றும் 1தீமோ 6:18 *ஒருவராய், சாவாமையுள்ளவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற வரும். மனுஷரில் ஒருவரும் கண்டிராத வரும். காணக்கூடாதவருமாயிருக்கிறவர் எனவும் மத்தேயு 11:29 ” என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்துமா க்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் எனவும் இறைவன் ஈசன் கூறுகிறதின் வழி திருக்குறளும் திருமறையும் மனுக்குலம் மேன்மைபெற ஒரே கருத்தையே வலியுறுத்துவதைக் காண்கிறோம்.
& அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
குறள் விளக்கம்: அறக்கடலாகவும், அருளாளனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல் அனுபவிப்பவர்களுக்கே அல்லாமல் மற்றவர்களுக்குப் பிறக்கும் பொழுதே வருகின்ற தீவினையாகிய பாவக்கடலை நீந்த இயலாது.






