தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பு

ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குசாவடிகளில், கூடுதல் ராணுவம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3.26 கோடி வாக்காளர்கள்: இத்தேர்தலில் மொத்தம் 3.26 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 3-வது பாலின வாக்காளர்கள் 2,676 பேர் உள்ளனர்.18 முதல் 19 வயது வரை உள்ளபுதிய வாக்காளர்கள் 9.99 லட்சம்பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் பணியில் மொத்தம் 3.75 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று அந்தந்த மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 80 வயதுநிரம்பிய மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே தேர்தல் அதிகாரிகள் சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பாதுகாப்பு பணிகளில் மொத்தம் 50 ஆயிரம் போலீஸார், 375கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.