மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:- தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சரியல்ல. சட்டப்படியோ, பேச்சுவார்த்தை மூலமோ காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் போராட்டம் அல்லது பேச்சுவார்த்தை மூலமாக திமுக அரசு விரைவாக செயல்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சசிகலாவை இதுவரை நாங்கள் சந்திக்கவில்லை. விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. புரட்சி பயணம் மீண்டும் தொடரும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






