தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு சென்றதா?
தேனி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் அரசு நிர்ணயித்ததை விட ₹4 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழித்தடங்கள்:-தேனி – போடி, தேனி – ஆண்டிபட்டி, தேனி – பெரியகுளம்
அரசு நிர்ணயித்த பயணக் கட்டணம் ₹11/- ஒன்று இரண்டல்ல கடந்த 8 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட தொகை ₹15/- தலா பயணி ஒருவருக்கு கூடுதல் வசூல் ₹4 ஆகும்.
இந்த கூடுதல் ₹4 எந்த அரசு உத்தரவின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது?
ஒரு பயணியிடம் 4 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் எனில், குத்துமதிப்பாக ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பயணிகளிடம் 4 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் எனில் ஒரு வழித்தடத்தில் மட்டும் ஒரு வருடம் 4 லட்சம் ரூபாய் கூடுதல் கட்டண கொள்ளை வசூல், ஆக மூன்று வழித் தடங்களிலும் (04 இலட்சம்x3 வழித்தடம்=12 இலட்சம்) 12 இலட்சம் x 8 வருடம் = 96 இலட்சம்.
தோராயம் ஒரு லட்சம் பயணிகள் என்றால் மூன்று வழித்தடங்களிலும் 8 வருடங்களாக 96 லட்சம் ரூபாய் என கோடிக்கணக்கில் கட்டண கொள்ளை வசூல் அரங்கேறி உள்ளது.
அரசாணையை மீறி பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் சாமானிய பொது மக்களான பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்த கூடுதல் பணம் அரசு கஜானாவிற்கு சென்றதா? இல்லையா?
தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் – C.C. No. 119/2025 பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ₹4-ஐ உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு “மக்களின் உரிமையை அறிந்துகொள்வோம், கேள்வி கேட்போம், நியாயத்தை நிலைநாட்டுவோம்” என்று போராடிய RTI ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்கப்படுகிறது.
அதுசமயம், மாவட்ட ஆட்சியர், TNSTC மேலாண்மை இயக்குநர், வட்டார போக்குவரத்து அலுவலர், தேனி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்தி கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை குறித்து தணிக்கை நடத்த வேண்டும்.
பயணிகளுக்கு Refund வழங்கும் நடைமுறையை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.







