சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக (டீன்) டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் 2026 ஜூலை 13 முதல் பொறுப்பேற்றுக்கொண்டார். சிறந்த கல்வியாளரும் நிர்வாகியுமான இவர், முன்னதாக இக்கல்வி நிறுவனத்தின் உடலியல் துறை இயக்குநர் பேராசிரியர், துறைத் தலைவர், துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளார். மேலும் பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேசிய டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம், நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல், துறைசார் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தரமான, நெறிமுறையான சுகாதாரத்தை உறுதிசெய்தல் ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.







