சென்னை:
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் பன்மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல் விமானங்களில் வழக்கத்துக்கு மாறாகக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பண்டிகை காலம் என்றால் சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள், படிப்பவர்கள¢ தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பண்டிகை வரும் போது சனி, ஞாயிறு என்று விடுமுறை நாட்களும் கூடவே வந்தால் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள், கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு சார்பில் 5,400 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை -& திருச்சி ரூ.4,000, சென்னை -& மதுரை ரூ.4,000, சென்னை & – கோவை ரூ.6,000 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சென்னைக்கு திரும்ப திருச்சி -& சென்னை ரூ.4,500, சென்னை – & மதுரை ரூ.4,900, கோவை &- சென்னை ரூ.4,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஏராளமான பயணிகள் விமானங்களில் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விமானக் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
குறிப்பாக சென்னை & தூத்துக்குடி சாதாரண நாட்களில் ரூ.6,991 ஆக இருந்த கட்டணம் ரூ.17,153 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை -& மதுரை ரூ.5,393 ஆக இருந்த கட்டணம் ரூ.19,761, சென்னை &- திருச்சி ரூ.4,646 ஆக இருந்த கட்டணம் ரூ.14,673, சென்னை -& கோவை ரூ.4,966 ஆக இருந்த கட்டணம் ரூ.16,496 என உயர்த்தப்பட்டுள்ளது. இது அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






