நன்னிலம் விவசாயி வீட்டில் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது62)என்பவரின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை சீரமைப்பதற்காக குழாய் அருகில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டினார். அப்போது மண்வெட்டிபட்டு உலோக சத்தம் வந்துள்ளது.
பதறிபோன அவர், சிறிய வடிவிலான உலோகப்பெட்டி புதைந்து இருந்ததை கண்டார். அதை திறந்து பார்த்தபோது பழமையான பெருமாள் சிலை ஒன்று, ஆண்டாள் சிலை இரண்டு, கருடன் சிலை ஒன்று, தெய்வ சிலை ஒன்று, உலோகத்தால் ஆன ருத்ராட்சம் ஐந்து, மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை மற்றும் வட்ட வடிவில் தாளம் 2 போன்றவை இருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செல்வராஜ் பேரளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நன்னிலம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என்றும், இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் இந்த சிலைகளை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத