பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா (வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,