பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல்
ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும்
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு
செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல்
ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை
மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும்
உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத்
தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) என்ற வீதம், 48 பறக்கும் படைகளும் (FST), 3
நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக்
குழுக்களும் (SST) ஏற்படுத்தப்பட்டு, இக்குழுவினர் மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை
மேற்கொள்வார்கள். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை
கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், 21.03.2026 அன்று வாகன சோதனையின்போது பறக்கும்
படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம்
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.54,290/-, பெரம்பூர்
சட்டமன்றத் தொகுதியில் ரூ.62,110/-, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.6,59,170/-,
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.77,430/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.3,00,000/-, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.60,400/-, மற்றும் நிலையான
கண்காணிப்புக் குழுவினரால் திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,19,000/-,
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.2,09,000/-, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சட்டமன்றத் தொகுதியில் ரூ.94,000/-, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.2,24,000/-, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூ.2,13,400/-, என மொத்தம்
ரூ.20,72,800/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இன்று (22.03.2026) வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் இராயபுரம்சட்டமன்றத் தொகுதியில் ரூ.31,500/-, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில்
ரூ.34,75,200/-, மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பெரம்பூர் சட்டமன்றத்
தொகுதியில் ரூ.1,00,000/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 1,00,000/-, என
மொத்தம் ரூ. 39,90,200/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
21.03.2026 முதல் 22.03.2026 வரை 2 நாட்களில் பறக்கும் படை மற்றும்
நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மொத்தம் ரூ.60,63,000/- ரொக்கப் பணம்
மற்றும்
மதுபானம் 4.2 லிட்டர், போதைப்பொருள் 28 கிராம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம்
ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.