பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு : ஒரு கிலோ அரிசி ரூ.335, ஒரு டசன் ஆரஞ்சி ரூ.400, இறைச்சி ரூ.1,000

இஸ்லாமாபாத்:
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கி 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 20 லட்சம் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களால் அந்நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ அரிசி விலை ரூ.70-ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்து. இனிப்பு ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.440, ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.400, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300. மாதுளம் பழம் ஒரு கிலோ ரூ.440, ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.340, கொய்யா பழம் ஒரு கிலோ ரூ.350, ஸ்டிராபெர்ரி பழம் ஒரு கிலோ ரூ.280 என விலை உயர்ந்து காணப்படுகிறது.
இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு கிலோ ரூ.700 என இருந்த இறைச்சி விலை ரூ.1,000 வரை உயர்ந்து உள்ளது. மட்டன் விலையும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 வரை அதிகரித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் கடந்த 2022ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் பாகிஸ்தானில் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவிக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. இதற்காக சிடிஎம்பி எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து சர்வதேச நாணய நிதியத்திடம் அனுப்பியது. ஆனால் அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது .

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு : ஒரு கிலோ அரிசி ரூ.335, ஒரு டசன் ஆரஞ்சி ரூ.400, இறைச்சி ரூ.1,000

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்