பிஎஸ்என்எல், ஏஐஎம்ஓ இணைந்து ஸ்மார்ட்ஃபோன் சேவையில் முதல் திறன் பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவன மனிதவள இயக்குனர் டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தில் 01/01/2025 அன்று தொடங்கி வைத்தார். அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மாநில வாரிய தலைவர் டாக்டர் A.அய்யாக்கண்ணு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சி பெறுவோருக்கு விளக்கம் அளித்தனர். ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தின் முதல்வர் வரவேற்புறை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கல்யாண் சாகர், மொபைல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும் என்றும், இந்த சேவையானது வளர்ச்சி மற்றும் அதிக  வேலைவாய்ப்புக்களைக் கொண்ட துறை என்றும் குறிப்பிட்டார். இந்திய மொபைல் சந்தையானது 11.5 மில்லியன் இணைப்புகளுடன் சுமார் 10 மில்லியன் மொபைல் கைபேசிகளை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதிய தலைமுறை மொபைல் மாடல்கள் வெளியிடப்படுவதால் தொழில்துறை மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே இந்த தொழில்நுட்ப்பகளத்தில் திறமையான தொழிலாளர் தேவையானது மிகவும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத