பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்ற குழு சந்திப்பு

புதுடெல்லி:
பிரதிநிதிகள் சபையை சேர்ந்த எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது. இந்தக் குழுவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்தியா காகசின் இணைத் தலைவர் பிரதிநிதி ரோகன்னா, குடியரசுக் கட்சியை சேர்ந்த இந்தியா காகசின் இணைத் தலைவர் பிரதிநிதி மைக் வால்ட்ஸ், பிரதிநிதி எட் கேஸ், பிரதிநிதி காட் கமாக், பிரதிநிதி டெபோரா ரோஸ், பிரதிநிதி ஜாஸ்மின் க்ரோக்கெட், பிரதிநிதி ரிச் மெக்கார்மிக் மற்றும் பிரதிநிதி திரு. தானேதர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தூதுக்குழுவினரை இந்தியாவிற்கு வரவேற்ற பிரதமர், இந்திய- அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிலையான மற்றும் இருகட்சி ஆதரவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதிபர் பைடனின் அழைப்பின் பேரில் ஜூன் மாதம் தமது வரலாற்று சிறப்புமிக்க அரசு முறைப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினார்.
இந்திய-&-அமெரிக்க விரிவான உலகளாவிய உத்திபூர்வ கூட்டாண்மை பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை மற்றும் மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை பிரதமரும் அமெரிக்க தூதுக்குழுவும் எடுத்துரைத்தனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச