பிரதமர் மோடி மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு வருகை… சென்னையில் ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறக்கிறார்

புதுடெல்லி:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2 ஆயிரத்து 400 கோடி திட்ட மதிப்பில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்படுகின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐந்து தளங்களை கொண்ட புதிய முனையத்தில், தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகைக்காகவும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இங்கு கார் நிறுத்துமிடம், வணிக வளாகம், திரையரங்குகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டன.
இந்நிலையில், மார்ச் 27ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி புதிய ஒருங்கிணைந்த முனையத்தை முறைப்படி திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்