புதுச்சேரியில் ரவுடி வெட்டிக் கொலை – குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை

புதுச்சேரி:
புதுச்சேரி அருகே பிறந்தநாளிலேயே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மணிமாறன் (எ) டூம் மணி (34). ரவுடியான இவர் மீது முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப் பழியாக மணிமாறனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது. இதனையறிந்த மணிமாறன் அந்த கும்பலுக்கு பயந்து கடந்த சில மாதங்களாக மடுகரை பகுதியில் உள்ள தனது நண்பரின் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். மேலும் அங்கிருந்த படியே கரும்பு வெட்டும் வேலைக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் இன்று மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள தோப்பு பகுதிக்கு சென்று பின்னர் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். மடுகரை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது திடீரென காரில் 5 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி கத்தி, அரிவாள் உள்பட ஆயுதங்களுடன் இறங்கினர். இதனைக் கண்ட மணிமாறன் அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் மணிமாறனை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றது. உயிர் பிழைக்க மணிமாறன் அங்குள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். அப்போது அந்த கும்பல் மணிமாறனை சரமாரியாக வெட்டியது. இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீஸார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து மணி மாறனை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும், முன்விரோதமா ? அல்லது வேறு காரணமா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மணிமாறனுக்கு இன்று பிறந்த நாள் என்று சொல்லப்படும் நிலையில், பிறந்த நாளிலேயே அவரை கொலை செய்த சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.