புதுச்சேரியை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க யுனெஸ்கோ திட்டம்…

புதுச்சேரியை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க வரைவு ஆவணத்தை இன்டாக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழு யுனெஸ்கோவிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

யுனெஸ்கோ வழிகாட்டுதல்களின்படி இந்த வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் புதுச்சேரிக்கு கிடைத்தால், புதுச்சேரி உலக அளவில் பிரபலமாவதோடு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இன்டாக் புதுச்சேரி பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அசோக் பாண்டா கூறுகையில், “புதுச்சேரி ஏற்கெனவே இந்த மைல்கற்களை எட்ட மூன்று முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியின் பாரம்பரிய தலங்கள் மற்றும் பாரம்பரிய வளாகங்களை பாதுகாக்க பாரம்பரிய ஒழுங்குமுறையை அரசு அறிவித்துள்ளது. மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழுவையும் ஏற்படுத்தபட்டுள்ளது.

மேலும் 118 தனியார் மற்றும் 13 மத கட்டிடங்களின் இரண்டாவது பட்டியலை, பட்டியலிடப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களின் கருத்துகளை கேட்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இவற்றில் ராஜ்நிவாஸ், பழைய நீதிமன்ற வளாகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்டவை ஆகும்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலை பொருத்தவரையில், அவர்கள் கொடுத்துள்ள 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்றாவது முக்கியமாக இருக்க வேண்டும். புதுச்சேரியை பொருத்தவரையில் பிரெஞ்சு காலனித்துவ கட்டிடங்கள், பாரம்பரிய தமிழ் வீடுகள் போன்ற தனித்துவமான கட்டிடக்கலை சூழலை கொண்டுள்ளன. தமிழ் கட்டிடங்களில் திண்ணை, முற்றம் போன்றவைகள் இருக்கின்றன. பிரெஞ்சு கட்டிடங்களை பொருத்தவரையில் பெரிய கதவுகள், ஜன்னல்கள் வைத்துள்ளனர். ஆகவே பாரம்பரியமாக இருக்கும் இவைகள் தான் பாதுகாக்கப்பட வேண்டியது.

இந்தியாவிலேயே ​​அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள என்பது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில் டெல்லி மற்றும் சாந்திநிகேதன் ஆகியவை தற்காலிக பட்டியலில் இருக்கின்றன. இருப்பினும், புதுச்சேரியில் பல தனித்தன்மைகள் உள்ளன. அவை இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் வேறுபட்டு இருக்கும்.

புதுச்சேரி நகரமைப்பு குழுமம், இன்டாக் நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. விரைவில் பணிகள் முடியும். இதற்கிடையில், உலக பாரம்பரிய நகரமாக பட்டியலிடுவதற்கு யுனெஸ்கோ குழு வருகை தரும் முன் புதுச்சேரி அரசிடம் இன்டாக் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆர்வலர்கள், சில நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துவது, செயல்படாமல் உள்ள தெருக்கள், மின் விளக்குகளை சரிசெய்தல் போன்றவை தீர்வு காண வேண்டும். முக்கியமாக இதனை புல்வார்ட் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் உள்ள பகுதியில் செய்ய வேண்டும். யுனெஸ்கோவின் அங்கீகாரம் புதுச்சேரிக்கு கிடைத்தால், புதுச்சேரி உலக அளவில் பிரபலமாகும். சுற்றுலா மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியும் கிடைக்கும்” என கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.