பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பயணம்…..

சென்னை தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பொன் விழா ஆண்டையொட்டி 30 பெண் போலீசார் சென்னை துறைமுகத்தில் இருந்து 3 பாய்மர படகு மூலம் பழவேற்காடு வழியாக கோடியக்கரைக்கு பயணிக்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார்.1,000 கி.மீ. தொலைவிலான இந்த கடல் பயணத்தை முடித்துக்கொண்டு பாய்மர படகு மூலம் பெண் போலீசார் நேற்று சென்னை திரும்பினார்கள். இந்த பயணத்தின் நிறைவு விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தில் பங்கேற்ற பெண் போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மித்தல், கூடுதல் டி.ஜி.பி. (நிர்வாகம்) பாலநாகதேவி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. பவானீஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் போலீஸ் சூப்பிரண்டுகள் கயல்விழி, நிஷா, சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்