பென் ஸ்டோக்ஸ் – ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தார் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடியது. இதில் இரு அணிகளும் 2-2 என்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன. இதையடுத்து 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 79 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், நியூசி, வீரர் டிரெண்ட் போல்ட் பந்தில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 4 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதில், ஒரு கட்டத்தில் மலான் 96 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆனால், பென் ஸ்டோக்ஸ் மட்டும் நங்கூரம் போன்று நின்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

அதன் பிறகு 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னும் 22 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சரமாரியாக அதிரடியாக விளையாடி 182 ரன்கள் குவித்து புதிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். அவர், 124 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உள்பட மொத்தமாக 182 ரன்கள் குவித்தார்.

இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தகார் ஆனார். 2ஆவது இடத்தில் ஜேசன் ராய் 180 ரன்களுடன் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறும் திட்டத்தில் இருந்தார்.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது ஓய்வு பெறும் முடிவை மாற்றினார். இந்த நிலையில், தற்போது செப்டம்பர் 13, 2023 ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். பென் லிஸ்டெர் 3 விக்கெட்டும், லாக்கி ஃபெர்குசன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத