பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பைகளை வகைப்பிரித்தல்‌ குறித்த விழிப்புணர்வு முகாம்‌ …..

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம்‌, அசோக்
நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருமுறை உபயோகப்படுத்தி
தூக்கி எறியக்‌கூடிய நெகிழி பொருட்களால்‌ ஏற்படும்‌ சுகாதாரக்‌ கேடுகள்‌
மற்றும்‌ அதனைத் தடுக்கும்‌ முறைகள்‌ குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று
(16.06.2023) நடத்தப்பட்டு, அங்கு பயிலும் மாணவியர்‌ மற்றும்‌
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில்‌ குப்பைகளை வகைப்பிரித்து அளித்தலின்‌ அவசியம்‌, ஒரு
தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்‌ கூடிய நெகிழிப்‌ பொருட்களால்‌
ஏற்படும்‌ சுகாதார சீர்கேடுகள்‌, அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய
பொருட்கள்‌ குறித்து காட்சி வழி விளக்கம்‌ மற்றும்‌ காணொலி காட்சிகள்‌
மூலமாக மாணவிகள்‌ மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெகிழி பைகளுக்கு மாற்றாக
பயன்படுத்தும் வகையில், ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர்
கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட 1,050 மஞ்சப்பைகள்‌ அனைத்து மாணவியர்,
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்‌ சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன்,
எக்ஸ்னோரா திரு.கோவிந்தராஜ்‌, பசுமைப்படை திரு.தங்கராஜ், எஸ்.எஸ்.
ஜெயின் கல்லூரி உதவிப் பேராசிரியர் சாந்தினி மற்றும் தலைமையாசிரியை
தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக