சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “இனமான பேராசிரியர் என்று முத்தமிழறிஞர் கலைஞரால் பெருமிதத்தோடும் பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.
பேராசிரியர் க.அன்பழகன், திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் 19.12.1922 அன்று பிறந்தார். படிக்கின்ற காலத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றாலின் பாலும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். உயர் படிப்பு படிக்கின்ற காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் படிப்பை முடித்தார். 1944 முதல் 1957ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்
பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தண்ணைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பேரறிஞர் அண்ணா பங்கேற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் ஆற்றிய உரையே அவர், வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சாமிநாதன், பொன்முடி மற்றும் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





