கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அரசு தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடைந்த விரக்தியில் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 40). இவரது மனைவி தெய்வா (30), இவர் குரூப் தேர்விற்கு வீட்டிலிருந்து தயாராகிவந்தார். தேர்வில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் குடும்பத்தாருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த தேய்வா, தனது மகள் இரணியா ( 8) மற்றும் மகன் கோகுலகிருஷ்ணன் (5) ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






