போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 2 ஆம் தேதி “வளர்ச்சியடைந்த பாரதம் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம்’’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மக்கள் பங்கேற்பு என்ற உணர்வின் மூலம் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தை வழிநடத்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
பிரதமரின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் தீவிர பங்கேற்புடன், மை பாரத் தலைமையிலான நாடு தழுவிய வெகுஜன இயக்கமாக இந்தப் பிரச்சாரம் தொடங்கப்படும்.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 இடங்களில் ஒரே நேரத்தில் உறுதிமொழி இயக்கங்கள் நடத்தப்படும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள், போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.
தேசிய நலனுக்காக பிரதமரின் அழைப்பில் சேரவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். கோடிக்கணக்கான இளைஞர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் மூலம், போதைப்பொருள் பயன்பாட்டை நிராகரிக்க தனிநபர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான, வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்கும் ஒரு நாடு தழுவிய சமூக இயக்கத்தை உருவாக்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.







