போதைப் பொருள் இல்லாத உலகை மாணவர்கள் படைக்க வேண்டும்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

சென்னை:
போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என திருச்சி மாநகரக் காவல் ஆணையர் என். காமினி வலியுறுத்தினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா & சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள்’ குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் என்.காமினி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக மாணவர்கள் முன்வர வேண்டும்.
ஏனென்றால் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் ஏற்படுகிறது. அதை நாம் முழுமையாகத் தடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக காவல்துறை அல்லது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதோடு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இதைதொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு மற்றும் அவற் றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கைப்பிரதியை அவர் வெளியிட்டார். அதோடு போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாணவர்களுடன் எடுத்துக் கொண்டதோடு, கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா, மாணவர்கள் நலத்துறைத் தலைவர் முனைவர் கார்வேம்பு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் பி. அருண் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் வரவேற்பு ஆற்றினார். தஞ்சாவூர் கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு நன்றி கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.