சென்னை:
நாளைய தீர்ப்பு செய்தியாளர் கயல்விழி அளித்துள்ள செய்தியில். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தனது 17 வயது மகன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை என்கிற அவப்பெயர் தனது மகன் மீது வந்ததாகவும், இதனால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையை பெற்றுக்கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மகன் சாவில் தொடர்புடைய பெண்ணை நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்று காப்பாற்றும் செயல்களில் மகளிர் காவல் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர், துணை ஆணையர் உத்தரவின் பேரில் செயல்பட்டுள்ளனர்.
காவல்துறை துணை ஆணையர் ஆதிவீர பாண்டியன் தன் மீதான பாலியல் ஆசையால் தான் சிரமத்திற்கு உள்ளானதாகவும் வேதனைபட தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதிவீர பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. நீதி கேட்டு போராடிய தன் புகைப்படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது. பெண்களுக்கு துணை நிற்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கலைய சிங்கப்பெண் என்கிற பாதுகாப்பு படையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதனால் நம்பிக்கை பிறந்தது.
இதையடுத்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருந்த ஜெகதீஸ்வரியை நாடியதாகவும், திமுக ஆட்சியில் நடந்த தனது மகன் இறப்பு, பெண் என்றும் பார்க்காமல் தனது புகைப்படத்தை மாஃபிங் செய்து வெளியிட்டவை குறித்து சென்னை வளசரவாக்கம் ஆர்&9 மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் மர்மச்சாவிற்கும், தனது படத்தை மார்பிங் செய்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் இதுதொடர்பாக தெரிவித்தபோது அவரது பதில் வேறு விதமாக இருந்ததால் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்து ஜாதியை பற்றி குறிப்பிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பெண்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர். கயல்வழியின் மகன் சாவிற்கும், தனக்கும் நியாயம் கிடைக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதைப் பற்றி முதல்வர் சிறப்பு கவனம் கொண்டு பத்திரிக்கையாளருக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு முறையான நடவடிக்கை எடுப்பாரா?
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், குடியரசு தலைவர், உள்துறை தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் காவல் தலைமை இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கயல்விழி குறிப்பிட்டுள்ளார். நீதிகேட்டு நீண்ட காலமாக போராடி வரும் அவருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
சென்னை:தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 19






