மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த – மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்…

மணிப்பூரில் கிறித்தவ மக்கள் மீதும் தேவாலயங்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மணிப்பூர் பற்றி எரிகிறது மக்கள் கொத்து கொத்தாய் கொலை செய்யப்படுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நாமெல்லாம் சாதி, மதம், இனம், மொழி, கடந்து இந்திய தாயிள் ஒரு தாய் மக்களாய் ஒருங்கிணைந்து மக்களின் உயிர்களை காத்திட வேண்டும்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் வெடித்த மத கலவரத்தில் 200 கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் விசப்பட்டுளார்கள். 180 க்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்கள். எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது 50,000-க்கும் போற்பட்டவர்கள் குடும்பங்களை இழந்து காடுகளில் பதுங்கி உணவின்றி நிர்மூலமாக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கதியாக நிற்கிறார்கள், லட்சக்கணக்கான மக்கள், ஒவ்வொரு நொடியும் உயிருக்கு பயந்து ஓடி ஒளிகிறார்கள், இந்த சம்பவம் எங்கோ வெளிநாட்டில் நடக்கவில்லை “மத சார்பற்ற இந்திய சனநாயக நாட்டில் நடந்து கொண்டிருப்பது மிக மிக வேதனையாக இருக்கிறது.” நம் கண்முன்னே நமது சகோதர சகோதரிகள் கடுமையாக தாக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் உயிரிழந்து வருவதை இதுவரையில் எந்த மதமும் எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது. மேலும் சமூக ஊடகங்களும் செய்தித்தாளும் தொலைகாட்சிகளும் இந்த தாக்குதலை மறைந்து வருகிறார்கள். எனவே கிறித்தவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம், நம்மை நாம்தாள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மணிப்பூர் கலவரம் மத சண்டை அல்ல இது பூர்வீக பழங்குடி இன மக்களின் நிலங்களை கையகப்படுத்தி அபகரித்து அதில் இருக்கும் கனிம வளங்களை கார்பிரேட் நிறுவனங்களுக்கு தனியார் மயமாக்கி தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் கலவர சதி திட்டமாகும். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் BJP ஆட்சியை பிடிப்பதற்காகவும் கார்ப்பிரேட் நிறுவனங்களின் நிதி உதவியை பெறுவதற்காகவும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்துத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு நடைபெறும் கலவரம் ஆகும்.

ஆண்டாண்டு காலமாக ஒருத்தாய் பிள்ளைகளாக பூர்வகுடி இணக்குழுக்களின் பண்பாட்டிற்கு நாகரிகத்திற்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் வாழ்ந்துவந்த “குக்கி பழங்குடியின கிறித்தவர்களும்” மைத்தி பழங்குடியின இந்துக்களும்” நாகா பழங்குடியின மக்களும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்த சொர்க பூமியான மணிப்பூரை BJP RSS இந்துத்துவ இயக்கங்கள் தங்களின் அரசியலுக்காக மோதலை உருவாக்கி கலவரத்தை தூண்டியிருப்பது இந்திய இறையாண்மையை படுகுழியில் புதைக்கின்ற மத துஷ்பிரயோக நடவடிக்கையாகும்.

எந்த மதமும், மனிதர்களை கொலை செய்ய சொல்ல வில்லை உண்மையிலேயே இந்து மதம் மனித நேயத்தை விருப்புமேயானால் மணிப்பூர் கலவரத்திற்கு இந்து மத தலைவர்களே முதல் குரல் எழுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இந்த கலவரம் RSS ன் நடவடிக்கையே ஆகும். அரசியனுக்காக மக்களை தவறாக பயன்படுத்தும் ஐந்துத்துவ இயக்கங்களிலிருந்து ஐந்து மத தலைஷ்கள் இந்து மக்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக மதசார்பற்ற இந்தியாவை பாதுகாத்திட அல்லும் பகலும் அயராது உழைக்கும் கிறித்துவ நிறுவனங்களும், திருச்சபைபாளர்களும் அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். அனைத்து கிறித்தவ சகோதர, சகோதரிகளே மணிப்பூர் கிறித்தவர்களை பாதுகாத்திட ஆர்பாட்ட களம் நோக்கி அனைவரும் வநது ஆதாவு தாரீர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்