மாநாட்டின் மூலம் பலத்தை நிரூபிப்பாரா ஓ.பி.எஸ்…?

சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி விஸ்வரூபம் எடுத்து கட்சி மொத்தத்தையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விட்டார். அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாட்டை கூட்டி இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் . இந்த மாநாட்டின் மூலம் அதிமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து தன் பலத்தை காட்ட நினைக்கிறார்.
இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மருது அழகுராஜ் தனது வலைத்தள பக்கத்தில், ‘திருச்சி பொன்மலையும் தீச்சுவாலை எரிமலையும்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
உனக்கும்
எனக்கும்
புரட்சித் தலைவர் தந்த
உரிமையை பறித்து..
ஒன்றரைக் கோடி
தொண்டர்கள்
உயிராக
துதிக்கும்
புரட்சித் தலைவி
அம்மாவை
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கி..
மக்கள் திலகமும்
மகராசி
தாயும்
கையெழுத்திட்ட
உறுப்பினர்
அட்டைகள்
செல்லாதென
மிரட்டி
அம்மா
அடையாளம்
காட்டிய
கழகத்தின்
பரதனாம்
அண்ணன்
ஓ.பி.எஸ்ஸை
அவமானப் படுத்தி..
சாதிமத
பேதமில்லா
சமத்துவ
இயக்கத்தை
சாதிக்குள்
அடைத்து..
கோலமகள்
வாசம் செய்த
கொடநாடு
கோவிலில்
கொலை கொள்ளை
நடத்தி..
பச்சிலையாம்
ரெட்டை இலையை
தொடர்
தோல்வியில்
ஆழ்த்தி
எடப்பாடி
பல்லுச்
சாமியும்
அவரது
எடுபிடிகளும்
நடத்துகிற
அரசியல்
அபகரிப்பை
அடியோடு
முறியடிக்க
கழகமே
உலகமென
வாழும்
மூவர்ண
இயக்கத்தின்
மூச்சான
தொண்டர்களே..

காவேரிக்
கரைக்கு
கடலெனவே
திரண்டு வாரீர்
ஒன்றரைக் கோடி
தொண்டர்களின்
உரிமை
காக்க..

ஒப்பில்லா
தாய் தந்த
தப்பில்லா
தங்க மகன்
ஓ.பி.எஸ்
அழைக்கிறார்.

எரிமலையாய்
வெடிப்போம்
எடப்பாடி சதிவலையை
தகர்ப்போம்
என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை நிர்ணயிக்க முடியும் என்று அரசியல் வட்டாரங்கள், விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அழைத்தால் வருவேன்…

இந்த மாநாராட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தால் வருவேன் என்று சசிகலா கூறியிருக்கிறார். சசிகலாவிற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்துசட்டப் பேராட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியிருந்தார். இதனால் சசிகலாவுக்கு அவர் அழைப்பு விடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிற வகையில் அழைப்புவிடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.