மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

சென்னை:
சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடந்தது. இதில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தேர்தலின்போது சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்றார் மு.க. ஸ்டாலின்.
ஆனால் இப்போது 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு. ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு. பால் விலை உயர்த்தியதையும் சேர்த்தால் மாதம் ரூ.6 ஆயிரம் மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றார்கள் தந்தார்களா? இப்படி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? உண்மையான திராவிட மாடல் அ.தி.மு.க. ஆட்சிதான். தேர்தல் நேரத்தில் தேசிய கட்சிகளாக இருந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தலைமை கழக பேச்சாளர் வண்ணை கணபதி, பெரும்பாக்கம் ராஜசேகர், சி.மணிமாறன் எம்.எம்.பகீம், சென்னை மாநகராட்சி கழக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.