மியான்மரில் ராணுவ வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 30 பேர் பலி; பலர் காயம்

நேபியேட்டோ:
மியான்மரில் சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தனர். இப்பகுதியில் இன்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் ராணுவத்தின் இம்முடிவை உலக நாடுகள் பலவும் எதிர்த்த நிலையில், ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் மியான்மரின் தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தை ராணுவம் நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்